மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரில் பெய்து வரும் கனமழையால் சாவித்திரி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு அந்நகரம் முழுவது தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் நாசிக் நகரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு மும்பை, கோவா இடையே உள்ள ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாலம் உடைந்தது, 2 வாகனங்கள் பாலத்துடன் அடித்து செல்லப்பட்டது. இதில் 22 பேர் மாயமாகியுள்ளனர்.