Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தடுப்பூசி செலுத்த தீவிரம்!

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (20:21 IST)
தேர்தல் நடைபெற உள்ள ஐந்து மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த மாநிலங்களில் தேர்தலை நடத்தலாமா? அல்லது ஒத்தி வைக்கலாமா என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர்களிடம் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை செய்தது இந்த ஆலோசனையின் போது மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments