Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவலி, வாந்தி இருக்கா? இதுவும் கொரோனா அறிகுறி தானாம்..!

Webdunia
திங்கள், 6 ஜூலை 2020 (15:37 IST)
தலைவலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவையும் கொரோனாவின் புது அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. 
 
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 10க்கும் அதிகமான இடத்தில் இருந்த இந்தியா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நான்காவது இடத்துக்கு முன்னேறியது. 
 
அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளை அடுத்து நான்காவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது ரஷ்யாவில் பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தினந்தோறும் சுமார் 20 ஆயிரம் பேர்களுக்கும் மேலாக இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருவதே இந்த முன்னேற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 
 
இந்நிலையில், காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வறட்டு இருமல் ஆகியவை இருந்தாலே கொரோனா வைரஸ் பரிசோதனை அவசியம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது தலைவலி, வாந்தி, வயிற்றுப் போக்கு கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி, வயிற்றுவலி ஆகியவையும் கொரோனாவின் அறிகுறிகளாக மாறியுள்ளன.
 
இந்த அறிகுறிகளை உணர்ந்தால் நிச்சயம் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திடீர் ஆய்வு.. 1538 டன் அரிசி வீணாகிய அதிர்ச்சி தகவல்..!

தமிழகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை.. கொடைக்கானல் ஓட்டல் ஓனர் கைது..!

தவெக மாநாடு: 100 டிகிரிக்கும் மேல் கடும் வெயில்.. ட்ரோன்கள் மூலம் தண்ணீர் பாட்டில் விநியோகம்..!

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை இல்லையா? கெஞ்சுவதுதான் அரசின் வேலையா? - அன்புமணி கேள்வி!

எடப்பாடி பழனிசாமி எதிரான வழக்கை விசாரிக்கலாம்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments