Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Senthil Velan
ஞாயிறு, 19 மே 2024 (13:22 IST)
டெல்லியின் அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
 
இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக  டெல்லி சாந்தினி சௌக் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்,  டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு தாம் வாக்களிப்பதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிப்பார் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் டெல்லியில் உள்ள ஏழு மக்களவை தொகுதிகளிலும் தங்கள் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ALSO READ: நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!
 
இந்தியாவின் பிரச்சினைகள் குறித்தான விவாதத்திற்கு பிரதமர் மோடிக்கு மீண்டும் சவால் விடுத்தார். பிரதமர் மோடியுடன் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்றும் ஆனால் அவர் வரமாட்டார் என உறுதியாக நம்புகிறேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments