Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக் பஜார் நிறுவனத்திற்கு மட்டும் ஏன் உரிமம் வழங்கப்பட்டது?: சீத்தாராம் யெச்சூரி கேள்வி

பிக் பஜார் நிறுவனத்திற்கு மட்டும் ஏன் உரிமம் வழங்கப்பட்டது?: சீத்தாராம் யெச்சூரி கேள்வி
, வியாழன், 24 நவம்பர் 2016 (13:19 IST)
பிக் பஜார் நிறுவனத்திற்கு மட்டும் ஏன் உரிமம் வழங்கப்பட்டது? என்றும் தனியார் நிறுவனத்திற்கு எவ்வாறு அனுமதி அளிக்கலாம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.


 

கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கத்தில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதில் புதிய நோட்டுகளை வங்கிகளுக்கு சென்று மக்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கடந்த 8ஆம் தேதி இரவு அறிவித்தார்.    

இந்த அறிவிப்பு, ஏழை மற்றும் நடுத்தர மக்களை அதிகம் பாதித்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கவும், பழைய நோட்டுகளை மாற்றவும் பொதுமக்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் காத்துக் கிடக்கின்றனர்.   

ஆனால் பெரும்பாலான ஏ.டி.எம் மையங்களில் பணம் இல்லை. அப்படியே இருந்தாலும் அங்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. அடுத்த மாத சம்பள தேதி நெருங்கும் வேளையில், அன்றாட செலவுகளுக்கு பணம் எடுக்க முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

எனவே, வங்கி, ஏ.டி.எம் மையங்களை தவிர மற்ற இடங்களிலும் புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல் பங்குகளில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

வருகிற 24ம் தேதி முதல், பிக் பஜார் நிறுவனங்களில், பொதுமக்கள், தங்களிடம் உள்ள டெபிட் கார்ட் மூலம் ரூ.2000 பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தனியார் நிறுவனத்திற்கு எவ்வாறு அனுமதி அளிக்கலாம் என்று சீத்தாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள சீத்தாராம் யெச்சூரி, “என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கு? பிக் பஜார் தனியார் நிறுவனத்திற்கான வங்கி உரிமம் ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டதா? இந்த நிறுவனத்திற்கு மட்டும் ஏன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும், ”ரூபாய் நோட்டுகளை இந்த நிறுவனம் விநியோகிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், போதிய அளவுக்கு நோட்டுக்களை வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்ககளுக்கும் மோடி அரசு வழங்காததே பிரச்சினை” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 நாட்களில் எதுவும் செய்ய முடியாது - மன்மோகன் சிங் அதிரடி