Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி வந்துட்டுன்னு ஜாலியா திரிய கூடாது! – மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (08:17 IST)
இந்தியா முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் கொரோனாவால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியா முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் அவசரகால தடுப்பூசியாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் டெல்லியில் மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் “உலகிலேயே வேகமாக தடுப்பூசி செலுத்தி வரும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் தற்போது தடுப்பூசி வந்து விட்டதாலும், கொரோனா கட்டுக்குள் இருப்பதாலும் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது. தொடர்ந்து மாஸ்க் அணிதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments