Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலும் மயிலும் துணை! ஹாப்பி கிருஷ்ண ஜெயந்தி! – அலப்பறை செய்யும் ஹர்பஜன்!

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (10:34 IST)
கிருஷ்ண ஜெயந்தியான இன்று முருகன் படத்தை பதிவிட்டு வாழ்த்து சொல்லியுள்ள ஹர்பஜனின் ட்வீட் வைரலாகியுள்ளது.

இந்திய கிரிகெட் அணியின் சுழல்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ரசிகர்களால் “தமிழ் புலவர்” என செல்லமாக அழைக்கப்படுகிறார். தமிழ் மீது ஆர்வம் கொண்ட ஹர்பஜன் சிங் அடிக்கடி தமிழில் ட்வீட் போடுவதும் அதை தமிழ் ரசிகர்கள் ட்ரெண்டாக்குவதுமாக இருந்த நிலையில் யூட்யூப் சேனல் ஒன்றில் திருவள்ளுவர் கெட்டப்பில் நடித்தும் வருகிறார் ஹர்பஜன் சிங்.

இன்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். தன் பங்குக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை டிவிட்டர் மூலமாக தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங் அதில் கிருஷ்ணர் படத்திற்கு பதிலாக தமிழ் கடவுள் முருகன் கையில் வேலை ஏந்தி மயிலுடன் நிற்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

ஹர்பஜனின் இந்த ட்வீட் வைரலாகியுள்ள நிலையில் உங்க தமிழ் பற்றுக்கு அளவே இல்லையா? கிருஷ்ண ஜெயந்திக்கு கூட முருகன் படத்தை ஷேர் பண்றீங்களே என நெட்டிசன்கள் கிண்டலாய் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி சிங்கக்குட்டி.. ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், அவர் 16 அடி பாய்வார்: செல்லூர் ராஜூ

வங்கக்கடலில் காற்றழுத்தம் எதிரொலி: தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்..!

தவெகவின் பூத் ஏஜெண்டுகள் மாநாடு: கோவை செல்கிறார் விஜய்..!

இந்த தீர்மானத்தை உங்களால் கொண்டு வர முடியுமா கொத்தடிமைகளே? முதல்வருக்கு ஈபிஎஸ் சவால்

நீ எனக்கா ஓட்டுப் போட்ட.. ஓசி பஸ்லதானே போறீங்க..? - பொன்முடியும் சர்ச்சை பேச்சு வரலாறும்!

அடுத்த கட்டுரையில்
Show comments