நிர்பயா வழக்கு; ஜனவரி 22-ல் நால்வருக்கும் தூக்கு… நீதிமன்றம் உத்தரவு

Arun Prasath
செவ்வாய், 7 ஜனவரி 2020 (17:02 IST)
நிர்பயா பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் நால்வருக்கும் வருகிற ஜனவரி 22 ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ராம் சிங், மகேஷ் சிங், அக்‌ஷய் குமார் சிங், பவன்குப்தா, வினய் ஷர்மா ஆகியோருடன் 16 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டான்

இதில் சிறுவனுக்கு 3 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். மற்ற நால்வருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நான்கு பேரின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில் 4 பேருக்கும் உடனடியாக மரண தண்டனை வழங்க வேண்டும் என நிர்பயாவின் பெற்றோர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், வருகிற ஜனவரி 22 ஆம் தேதி காலை 7 மணிக்குள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்