Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் தடவியதும் கொத்தாக உதிர்ந்த தலைமுடி..பியூட்டி பார்லர் மீது இளம்பெண் புகார்

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (14:30 IST)
முடிவெட்டிக் கொள்ள  பியூட்டி பார்லர்  சென்ற பெண் எண்ணெய் தடவியதும், கையோடு தலைமுடி கொத்தாக வந்ததால், அதிர்ச்சியடைந்து, இதுபற்றி அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, ஐதராபாத் நகர், ஓல்ட் சிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் தலைமுடியை வெட்டிக் கொள்வதற்காக அருகில் உள்ள அபிட்ச் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்குச் சென்றிருந்தார்.

அந்தப் பார்லரில் இருந்த அழகுக்கலை நிபுணர் அப்பெண்ணுக்கு தலைமுடியில் ஒருவித எண்ணெய்யை தடவி, அதன்பின்னர், முடியை வெட்டியதாகவும், அதன்பின்னர், தலைமுடி கொத்தாக கொட்டி, கொஞ்ச நேரத்திலேயே உச்சந்தலையில் இருந்த அனைத்து முடிகள் உதிர்ந்துவிட்டதால் அப்பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வீட்டிற்கு திரும்பிய அவரைப் பார்த்து கணவர் இதுபற்றி கேட்டுள்ளார். அப்போது அப்பெண்ணுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்துள்ளது.

அதன்பின்னர், அப்பெண் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று அந்த பியூட்டி பார்லர் மீது புகார் அளித்துள்ளார். இப்புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments