Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவு ரயிலில் துப்பாக்கிச்சூடு.. 3 பயணிகள் உயிரிழப்பு.. ஆர்.பி.எஃப் வீரர் கைது..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (08:56 IST)
விரைவு ரயிலில் ஆர்பிஎஃப் வீரர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் மூன்று பயணிகள் உயிரிழந்த நிலையில் அந்த வீரர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற ஜெய்ப்பூர் விரைவு ரயிலில்  பயணம் செய்த ஆர்பிஎஃப் வீரர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த ரயில் மகாராஷ்டிரா மாநிலம் பால்கார் என்ற ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோதுதான் இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக தெரிகிறது. துப்பாக்கியால் சுட்டதில் ஆர்பிஎப் காவலர் மற்றும் 3 பயணிகள் உயிரிழந்ததாகவும் துப்பாக்கியால் சுட்டு விட்டு கீழே குதித்து தப்ப முயன்ற ஆர்பிஎஃப் வீரர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த சம்பவம் அந்த ரயிலில் பயணம் செய்த பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments