Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சம்பந்திகள் இடையே உண்டான காதல்! – இளம் ஜோடி திருமணம் நிறுத்தம்!

Webdunia
செவ்வாய், 21 ஜனவரி 2020 (14:23 IST)
குஜராத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம் ஜோடிகளின் பெற்றோர் இடையே காதல் ஏற்பட்டு தப்பியோடி விட்டதால் திருமணம் தடைப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் வசித்து வரும் துணிக்கடை தொழிலதிபர் ஒருவர் தன் மகனுக்கு அதே பகுதியை சேர்ந்த வைர கைவினைஞர் ஒருவரின் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். இருவீட்டார் ஒப்புதலோடு இளம் ஜோடிகளின் நிச்சய விழா முடிந்துள்ளது.

அடுத்த பிப்ரவரி மாதம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் துணிக்கடை தொழிலதிபருக்கும், வைர கைவினைஞரின் மனைவிக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வரும் முன்னரே தங்கள் வாழ்க்கையை வாழ அவர்கள் ஜோடியாக தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து இரு வீட்டாரும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதனால் இளம் ஜோடிகளின் திருமணமும் நிறுத்தப்பட்டு விட்டது.

மேலும் துணிக்கடை தொழிலதிபருக்கும், அந்த பெண்ணுக்கு முன்னொரு காலத்தில் காதல் இருந்துள்ளது. அப்போதுதான் அந்த பெண்ணை வைர கைவினைஞருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். நீண்ட வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்து கொள்ளவும் பழைய காதலை புதுப்பித்து கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி நில அதிர்வு குறித்து பதட்டம் வேண்டாம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

மும்மொழிக் கொள்கை பத்தி நீங்க பேசாதீங்க விஜய்! - தமிழிசை பதிலடி!

அடுத்த மாதம் +2 பொதுத்தேர்வுகள் தொடக்கம்! மாணவர்களுக்கு தேர்வு துறை எச்சரிக்கை!

அரசாங்க தகவல்களை திருடுகிறதா DeepSeek AI? தடை விதித்த தென்கொரியா!?

கும்பமேளா முடியுறதுக்குள்ள ரயில்கள் காலி..? அடித்து உடைக்கும் பயணிகள்..! - ரயில்வேக்கு செலவு!

அடுத்த கட்டுரையில்
Show comments