Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 நாட்களில் பிரச்சனைக்கு தீர்வு: ஹர்திக் பட்டேலுக்கு குஜராத் முதலமைச்சர் உறுதி

10 நாட்களில் பிரச்சனைக்கு தீர்வு: ஹர்திக் பட்டேலுக்கு குஜராத் முதலமைச்சர் உறுதி
, செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (09:57 IST)
பட்டேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 10 நாட்களில் முடிவு அறிவிக்கப்படும் என்று குஜராத் முதலமைச்சர் ஆனந்திபென் பட்டேல் தெரிவித்துள்ளார்.
 
குஜராத்தின் மேட்டுக்குடி வர்க்கமான படேல் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கேட்டு போராடி வருபவர் ஹர்திக் பட்டேல். இந்தக் கோரிக்கையை முன்வைத்து பட்டேல் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது.


 
 
தடியடி, கண்ணீர் புகைக்குண்டு என வன்முறையில் ஈடுபட்ட பட்டேலின் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
 
தங்கள் சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை வழங்காவிட்டால் மீண்டும் பேரணி நடத்தப்போவதாக ஹர்திக் பட்டேல் அண்மையில் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் குஜராத் முதல் அமைச்சர் அனந்திபென் பட்டேலை ஹர்திக் பட்டேல் நேரில் சந்தித்து பேசினார்.  இச்சந்திப்பின் போது இப்பிரச்சனைக்கு 10 நாட்களில் தீர்வு காணப்படும் என்று முதல் அமைச்சர் உறுதி அளித்ததாக ஹர்திக் பட்டேல் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil