4 கின்னஸ் சாதனைகளுடன் கொண்டாடப்படும் பிரதமர் மோடியின் 66-வது பிறந்தநாள்
4 கின்னஸ் சாதனைகளுடன் கொண்டாடப்படும் பிரதமர் மோடியின் 66-வது பிறந்தநாள்
பிரதமர் நரேந்திர மோடியின் 66வது பிறந்தநாளை இன்று (17-09-2016) கொண்டாடுகிறார். இதற்காக குஜராத் சென்றுள்ள மோடி பல்வேறு கின்னஸ் சாதனைகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 66-வது பிறந்த நாளையொட்டி குஜராத் அரசு சார்பில் பல்வேறு நலதிட்ட உதவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் நவசாரி எனும் இடத்தில் 11,223 மாற்று திறனாளிகளுக்கு, ரூ.7.5 லட்சம் செலவில் மாற்று திறனாளிகளுக்கு உபகரணங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
இதனை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை உதவிகளை அதிக நபர்களுக்கு வழங்கி, கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் மாற்று திறனாளிகள் ஒரே நேரத்தில் ஆயிரம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் சாதனை படைக்க உள்ளனர். மேலும் 1000 பேருக்கு சக்கர நாற்காலி வழங்கியும், 1000 பேருக்கு காது கேட்கும் கருவிகள் என மோடியின் பிறந்தநாளான இன்று மொத்தம் 4 கின்னஸ் சாதனை படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதற்கு முன்னர் வாரணாசி தொகுதியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 10,200 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டு கின்னஸ் சாதனைக்கு அனுப்பட்டது. ஆனால் போட்டோ, வீடியோ போன்ற உரிய ஆதாரங்கள் இல்லாததால் கின்னஸ் சாதனையில் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.