திருப்பதி லட்டில் குட்கா புகையிலை.. அடுத்த சர்ச்சையால் பரபரப்பு..!

Siva
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (18:33 IST)
திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு ஏற்கனவே நாடு முழுவதும் பக்தர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது அடுத்த சர்ச்சையாக திருப்பதி லட்டில் குட்கா புகையிலை இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலந்த நெய்யில்  தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி திருப்பதி கோவிலுக்கு சென்ற பெண் ஒருவர் வாங்கி வந்த லட்டு பிரசாதத்தில் குட்கா புகையிலை இருப்பதாக வெளிவந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை திருப்பதி தேவஸ்தானம் முற்றிலும் மறுத்துள்ளது. இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இது உண்மையான வீடியோவா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments