Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானப் பயணங்களில் இனி போர் அடிக்காது – வருகிறது புதிய வசதி

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (17:04 IST)
2109 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் விமானங்களில் பயணங்களின் போது மொபைல் சேவைகளை வழங்குவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

விமானப் பயணங்களை நினைத்து ஏங்குவர்கள் ஒருபுறம் இருந்தாலும் தொடர்ந்து விமானங்களில் பயணம் செய்வோரைக் கேட்டால் தெரியும் அது எவ்வளவு போரான பயணம் என்று. பயணத்தின் போது நமது மொபைல் போனையோ அல்லது இண்டர்நெட் போன்ற அத்தியாவசிய தேவைகளை முழுமையாகத் துண்டித்து விடுவது விமானப் பயணம்.

ஆனால் அந்த குறையையும் தீர்க்க இப்போது புது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இனி, இந்தியாவில் விமானப் பயணத்தின் போது இணையம் மற்றும் மொபைல் அழைப்பு வசதிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குவதற்கான நடவடிக்கையில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காகச் சிறப்பு உள் அமைச்சரவைக் குழு ஒன்றை அமைக்க முடிவெடுத்துள்ளது.

அமைக்கப்பட இருக்கும் இந்தக்குழு 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து ஆலோசித்து திட்டத்தை வரையறுக்க உள்ளது. மார்ச் மாதம் இறுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இக்கூட்டத்தில் விமான நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments