Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவசேனா கோரிக்கைக்கு ஆளுனர் மறுப்பு: மகாராஷ்டிராவில் மீண்டும் குழப்பம்

Webdunia
திங்கள், 11 நவம்பர் 2019 (21:10 IST)
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா தரப்பில் இருந்து 2 நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில் அந்த அவகாசத்தை அளிக்க ஆளுநர் மறுத்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதுகுறித்து ஆதித்ய தாக்கரே செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ‘மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைக்க விரும்புவதாக் ஆளுனரிடம் கூறினோம். ஆட்சி அமைக்கும் உரிமையை ஆளுனர் மருக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் ஆட்சி அமைக்க எங்களது தரப்பில் இருந்து இரண்டு நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில் அந்த அவகாசத்தை தர ஆளுனர் மறுத்துவிட்டார் என்று கூறினார்.
 
முன்னதாக ஆதித்ய தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா தலைவர்கள் ஆளுநர் பகத் சிங் கோஷாரி அவர்களை இன்று இரவு 7 மணிக்கு சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது சில சுயேட்சை எம்.எல்.ஏக்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து இன்னும் ஆதரவு கடிதத்தை பெறவேண்டியுள்ளது. கூடுதல் நேரம் ஆளுனர் தர மறுத்துவிட்டதாக் இந்த இரு கட்சிகளிடம் இருந்து அதற்குள் ஆதரவு கடிதத்தை வாங்கி சிவசேனா ஆட்சி அமைக்குமா? என்பது விரைவில் தெரிந்துவிடும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments