Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா ஊடுருவலை தடுக்கும் தைரியம் பா.ஜ.க. அரசுக்கு இல்லை: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2014 (13:32 IST)
சீனாவின் ஊடுருவலை தடுக்கும் தைரியம் மத்திய பா.ஜ.க. அரசுக்கு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி குற்றம்சாற்றியுள்ளார்.
 
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:-
 
பஞ்சசீல கொள்கையின் 60-வது ஆண்டு விழாவை முன்னிட்டு அண்மையில் இந்திய குழுவினர் சீனாவுக்கு சென்றிருந்தனர். அப்போது சீனா தரப்பில் அந்த நாட்டு வரைபடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகள் சீனாவின் பகுதிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன.
 
இதேபோல் லடாக் எல்லையில் சீன ராணுவம் இப்போது ஊடுருவியுள்ளது. ஆனால் சீனாவின் அத்துமீறல்களை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மவுனம் காக்கிறது. சீன ராணுவ ஊடுருவலை தடுக்கும் தைரியம் பா.ஜ.க. அரசுக்கு இல்லை. அதனால் ஊடுருவல்கள் அதிகரித்து வருகின்றன என்றார்.
 
காஷ்மீரின் லடாக் பகுதியில் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவி இருப்பதாகவும் அந்த நாட்டு வீரர்கள் கூடாரங்கள் அமைத்து தங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு வருகை தரவுள்ள நிலையில் இந்த ஊடுருவல் இருநாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

Show comments