Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட் எதிரொலி: தங்கம் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு

Webdunia
வியாழன், 10 ஜூலை 2014 (17:01 IST)
மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்ததையடுத்து பங்குச்சந்தைகள் சற்று சரிந்தன. சென்செக்ஸ் 72 புள்ளிகள் குறைந்து 25372 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதேபோல் தங்கம் விலையும் சற்று அதிகரித்தது.
 
இன்று மாலை நிலவரப்படி 22 காரட் தங்கம் சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து, சவரன் 21 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் 22 காரட் தங்கம் கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ரூ.2715-க்கு விற்பனை ஆனது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 59 உயர்ந்து, ரூ.2904-க்கு விற்பனை ஆனது.
 
இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்தது. பார் வெள்ளி கிலோவுக்கு 955 ரூபாய் அதிகரித்து ரூ.46300 என்ற நிலையில் இருந்தது. ஒரு கிராம் ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.49.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

விவசாயிகள் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை..! அண்ணாமலை காட்டம்.!

Show comments