Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டாடிய பெண் சாமியார்: மணமகன் அத்தை பலி

Webdunia
புதன், 16 நவம்பர் 2016 (14:54 IST)
அரியானா மாநிலத்தில் நடந்த திருமணத்தில் கலந்துக்கொண்ட இந்து மகாசபா தலைவர் சாத்வி தேவா என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொண்டாடினார். அதில் மணமகன் அத்தை உயிரிழந்தார்.
 

 


அரியானா மாநிலம் கர்ணல் நகரில் நடைப்பெற்ற திருமணத்திற்கு, இந்து மகாசபா தலைவர் சாத்வி தேவா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார்.
 
திருமண நிகழ்வில் மணமகனின் உறவினர்கள் நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். பெண் சாமியார் சாத்வி தேவா வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தனது மகிழ்ச்சியை நடனமாடி வெளிப்படுத்தினார்.
 
அப்போது அவரது ஆதரவாளர்கள் பல பேர் அவருடன் கலந்து கொண்டு, துப்பாக்கியால் சுட்டனர். இதில் துப்பாக்கி குண்டுகள் தவறுதலாக மணமகனின் அத்தை மீது பட்டு அவர் உயிரிழந்தார்.
 
மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த பெண் சாமியார் சம்பவ இடத்தில் இருந்து தனது ஆதரவாளர்களுடன் தப்பி ஓடினார். காவல்துறையினர் பெண் சாமியார் மீது வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அனாதையாக நின்ற காரில் ரூ.10 கோடி ரொக்கம், 52 கிலோ நகை.. ஐடி அதிகாரிகள் அதிர்ச்சி..!

அதானி குழும வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிபதி திடீர் பதவி விலகல்.. என்ன காரணம்?

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு தேதி திடீர் மாற்றம்.. புதிய தேதி என்ன?

அடுத்த கட்டுரையில்