Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிட வேண்டும்; டெல்லி முதல்வர்

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (12:43 IST)
இந்திய ரூபாய் நோட்டுகள் அனைத்திலுமே தற்போது மகாத்மா காந்தியின் படம் மட்டுமே இருக்கும் நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படமும் வைக்க வேண்டும் என ஒரு சிலர் குரல் எழுப்பி வருகின்றனர் 
 
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ரூபாய் நோட்டில் கடவுள் புகைப்படத்தை வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 
 
இனிமேல் ரிசர்வ் வங்கி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் காந்தி படம் மட்டுமின்றி விநாயகர் மற்றும் லக்ஷ்மி போன்ற தெய்வங்களின் படங்களை வைக்க வேண்டும் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார் 
 
ரூபாய் நோட்டுகளில் கடவுள் படங்கள் அச்சடிக்கப்பட்டாஅல் தான் நாட்டின் பொருளாதாரம் முன்னேறும் என்றும் தெய்வங்களின் ஆசி நாட்டிற்கு மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை இந்து மதம் அல்லாத மற்ற மதத்தினர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

ஞானசேகரனை ஒரு தியாகி போல் திமுகவினர் சித்திரித்தனர்.. தவெக அறிக்கை..!

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: டெல்லி மாணவர் முதலிடம்

நான் தெர்மகோல் விஞ்ஞானியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க என்ன செஞ்சீங்க? - செல்லூர் ராஜூ விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments