Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆணவப்போக்கால் பாஜகவை தண்டித்த கடவுள் ராமர்..! ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கடும் விமர்சனம்..!!

Senthil Velan
வெள்ளி, 14 ஜூன் 2024 (15:12 IST)
பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் 241 இடங்களில் சுருங்கியதற்கு அக்கட்சி தலைவர்களின் ஆணவப்போக்கே காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் விமர்சித்துள்ளார்.

2014-ல் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, 2019 தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்து கொண்டது. மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 241 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றது.
 
இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே கனோட்டாவில் நடைபெற்ற ‘ராமரத் அயோத்தி யாத்ரா தர்ஷன் பூஜான் சமரோ’  நிகழ்ச்சியில்  ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  பா.ஜ.க.வின் ஆணவப்போக்கால் அக்கட்சியை ராமர் தண்டித்துவிட்டார் என்று கூறினார்.

அவர்களின் ஆணவம் காரணமாக ராமரால் அந்தக் கட்சி 241 இடங்களோடு தடுத்து நிறுத்தப்பட்டது என்று அவர் தெரிவித்தார். ராமர் மீது பக்தி கொண்டிருந்தவர்கள் படிப்படியாக ஆணவக்காரர்களாக ஆகிவிட்டனர் என்றும் ராமரின் பக்தர்கள் பணிவுடன் இருக்க வேண்டும்  என்றும் அவர் தெரிவித்தார். பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் என்பதே ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அவர் கூறினார். 

ALSO READ: நீட் முறைகேடு.! சிபிஐ விசாரணை கோரி மனு.! தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க உத்தரவு..!!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான நேரம் சரியானதல்ல என்று பெரும்பாலான சாதுக்கள், துறவிகள் கூறினார்கள் என்றும் சாதுக்கள், துறவிகளின் கருத்தை மோடி புறந்தள்ளிவிட்டார் என்றும் இந்திரேஷ் குமார் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.. அதிமுக களத்தில் இறங்கும்: ஈபிஎஸ்

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

அடுத்த 3 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்.. கனமழை எச்சரிக்கை..!

ஓடும் ஆம்புலன்ஸில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை .. ம.பியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments