Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைக்கு சென்ற மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த வெறிச்செயல்!

கடைக்கு சென்ற மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த வெறிச்செயல்!

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (16:40 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த வெறிச்செயல் நடந்துள்ளது.


 
 
உத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் மேற்குவங்கத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனது சகோதரனுடன் சேர்ந்து கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். மாணவியும் அவரது சகோதரனும் தேர்வு முடிந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தயாராகிக்கொண்டு இருந்தனர்.
 
அப்போது அந்த மாணவி சில பொருட்கள் வாங்க அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அந்த கடைக்காரர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து மாணவிக்கு வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளார். அதன் பின்னர் மயக்கமான மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
மயக்கம் தெளிந்த பின்னர் இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மாணவியை அவர் மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட அந்த மாணவியை தனது நண்பர்களின் உதவியுடன் போலீசில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட கடைக்காரர் அஷ்தோஷ் திவேதியை கைது செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்