Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை தொடர்ந்து கற்பழித்து கர்ப்பமாக்கிய பலே வாலிபர்!

சிறுமியை தொடர்ந்து கற்பழித்து கர்ப்பமாக்கிய பலே வாலிபர்!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (11:07 IST)
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் 15 வயது சிறுமி ஒருவரை வாலிபர் ஒருவர் மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து கற்பழித்து வந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


 
 
ஹைதராபாத்தில் பெண் ஒருவர் துணைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த துணிக்கடையில் வாலிபர் ஒருவர் துணிகளை தைத்துக்கொடுக்கும் பணியை செய்து வந்துள்ளார். மேலும் அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி ஒருவரும் பணிபுரிந்து வந்துள்ளார்..
 
இந்நிலையில் அந்த துணிக்கடை நடத்தி வரும் பெண் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அந்த வாலிபர் அந்த சிறுமிக்கு தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து வந்துள்ளார். பல மாதங்களாக தொடர்ந்து இந்த செயலை யாருக்கும் தெரியாமல் செய்து வந்துள்ளார் அந்த வாலிபர்.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த சிறுமி வீட்டில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
 
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுயிடம் நடத்திய விசாரணையில் துணிக்கடையில் அந்த வாலிபர் அடிக்கடி தனக்கு குடிக்க தண்ணீர் கொடுத்ததாகவும் அதன் பின்னர் தனக்கு என்ன நடந்தது என எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்ததில் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பலமுறை கற்பழித்து வந்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் அந்த நபருக்கு ஆயுள் தண்டனை வரை கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து: கோவில் நிர்வாகம் அறிவிப்பு..!

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்கள் மீது கரிசனமா? தவெக தலைவர் விஜய் கேள்வி..!

அம்பானி வீடு இருப்பது வக்பு வாரிய நிலத்திலா? வக்பு சட்டத்தால் அம்பானிக்கு எழுந்த சிக்கல்!

டிரம்ப் வரிவிதிப்பு எதிரொலி: ஆசிய பங்குச்சந்தை எழுச்சி.. ஐரோப்பிய பங்குச்சந்தை வீழ்ச்சி..!

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments