Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை பலாத்காரம் செய்து ஓடையில் வீசிச்சென்ற கொடூர கும்பல்!

சிறுமியை பலாத்காரம் செய்து ஓடையில் வீசிச்சென்ற கொடூர கும்பல்!

Webdunia
சனி, 2 செப்டம்பர் 2017 (18:29 IST)
ஜார்கண்ட் மாநிலத்தில் 14 வயது சிறுமி ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று பலாத்காரம் செய்துவிட்டு கழிவு நீர் ஓடையில் வீசிச்சென்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.


 
 
14 வயதான சிறுமி ஒருவர் பாக்பேரா பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு நேற்று தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் பின் தொடர்ந்துள்ளது.
 
அந்த கும்பல் சரியான நேரம் பார்த்து சிறுமியை தாக்கி மறைவான இடத்துக்கு கொண்டு சென்று அதில் 3 பேர் சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி தனது சுயநினைவு இழந்துள்ளார்.
 
சுய நினைவை இழந்த அந்த சிறுமியை பலாதகாரம் செய்து முடித்த பின்னர் அந்த கும்பல், கழிவு நீர் ஓடையில் வீசிச்சென்றுள்ளது. இதனால் அந்த சிறுமி பல மணி நேரம் கேட்பாரற்று அனாதையாக கிடந்துள்ளார்.
 
அதன் பின்னர் சுயநினைவு திரும்பிய அந்த சிறுமி உதவி கேட்டு அழுதுள்ளார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அந்த 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவான அந்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் முதலாளி ஒரு பொய்ப்புழுகி..! எலான் மஸ்க் பற்றி குறை சொன்ன Grok AI!

சுற்றுலா சீசன் வந்தாச்சு.. குழந்தைகளுக்கு சுற்றுலாவை மேலும் சுவாரஸ்யமாக்க சில Activities!

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!

அடுத்த கட்டுரையில்