Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயதில் கடத்தி 400 முறை பலாத்காரம்... டெல்லியில் பெண்ணுக்கு நடந்த சோகம்

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2016 (11:03 IST)
12 வயதில் கடத்தப்பட்டு, பலமுறை பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு சித்ரவதைக்கு ஆளான இளம்பெண் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார். 


 
 
கடந்த செப்டம்பர் 9, 2006 ஆம் ஆண்டு தனது 12 வயது மகள், தங்கை வீட்டுக்கு செல்லும் போது, அவர் கடத்தப்பட்டார் என போலீஸில் அப்பெண்ணின் தாய் புகார் அளித்தார். அந்த மகள் 10 வருடங்களுக்கு பிறகு, 22 வயது பெண்ணாக பல்வேறு நபர்களால் சித்ரவதை அனுபவித்த திரும்பி வந்துள்ளார்.
 
அப்பெண் கூறியதாவது, எனது சித்தி வீட்டிற்கு செல்லும் போது சிலர் என்னை மயக்கமருந்து தடவிய கைக்குட்டையால் என் முகத்தை அழுத்தியதால் மயக்கமடைந்தேன். அதன் பின் ஒரு விபச்சார கும்பலால் சிலருக்கு விற்கப்பட்டேன்.
 
மேற்கு வங்கம், பஞ்சாப், குஜராத், ஹரியானா, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு விற்கப்பட்டு சித்ரவதை அனுபவித்துள்ளேன். சில காமூகர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, சிகரெட்டால் சூடும் வைத்துள்ளனர். 
 
கடத்தப்பட்ட நாளிலிருந்து இதுவரை 400க்கும் மேற்பட்டோரால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளேன் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். 
 
அந்த பெண் கொடுத்த தகவலின்படி தற்போது, 61 மற்றும் 70 வயதான இரண்டு முதியோர் உடபட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளதுள்ளனர்.
 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பாஜக பயப்படுகிறது.. காங்கிரஸ் பிரமுகர் விமர்சனம்..!

மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞரின் தாய் மீது புகார்.. நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னை நிலவரம்..!

வெட்டிங் லோன்.. திருமண கடன் வழங்கும் மேட்ரிமோனியல் இணையதளம்..!

அடுத்த கட்டுரையில்