Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னை திருமணம் செய்யாத காதலன் மீது ஆசிட் அடித்த காதலி

Webdunia
புதன், 24 மே 2017 (21:43 IST)
ஆந்திராவில் காதலியை விட்டுவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துக்கொண்ட வாலிபர் மீது காதலி ஆசிட் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திரா மாநிலம் குண்டூர் அருகே உள்ள பெடாகாகனி பகுதியை சேர்ந்த முகமது இலியாஸ்(23), ஹிமா பிந்து(21) ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இலியாஸ் பிந்துவை திருமணம் செய்துக்கொள்வதாக உறுதியளித்ததை நம்பி, பிந்து தன்னை பறிகொடுத்ததாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் இலியாஸ் தன் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த பிந்து இலியாஸ் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். இலியாஸ் குடும்பத்தினர், இனி எதுவும் செய்ய முடியாது மன்னித்து விடும்படி கெஞ்சியுள்ளனர். இதையடுத்து பிந்து அங்கிருந்து சென்றுவிட்டார்.
 
இறுதியாக ஒரு முறை சந்தித்து பேச வேண்டும் என்று பிந்து இலியாஸிடம் கூறியுள்ளார். இலியாஸ் பிந்துவை சந்திக்க சென்றுள்ளார். பிந்து, தான் கொடுத்த பரிசு பொருட்கள் அனைத்தையும் இலியாஸிடம் இருந்து வாங்கிக்கொண்டார்.
 
பின் இருவரும் ஆட்டோவில் வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது ஆட்டவை விட்டு கீழே இறங்கிய இலியாஸ் வாயில், பிந்து மறைந்து வைத்திருந்த ஆசிட்டை ஊற்றியுள்ளார். பின் அங்கிருந்து பிந்து தப்பி சென்றுவிட்டார்.
 
ஆட்டோ டிரைவர் இலியாஸ் குடுபத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பின் இலியாஸ் குண்டூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் இலியாஸிடம் இறுதி வாக்குமூலம் பெற்றனர். அதில், இலியாஸ் தன் மரணத்திறகு பிந்துதான் காரணம் என தெரிவித்துள்ளார்.
 
இதையடுத்து காவல்துறையினர் பிந்து மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இதனிடையே பிந்து அவரது தந்தையுடன் தலைமறைவாகிவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments