Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரு தலை காதல் விபரீதம்: இளம்பெண் மீது தீ வைப்பு

ஒரு தலை காதல் விபரீதம்: இளம்பெண் மீது தீ வைப்பு

ஒரு தலை காதல் விபரீதம்: இளம்பெண் மீது தீ வைப்பு
, திங்கள், 29 ஆகஸ்ட் 2016 (14:31 IST)
டெல்லியில் ஒருதலையாக காதலித்து வந்த பெண் திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் அந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது.


 
 
வடமேற்கு டெல்லியில் அபிஷேக் என்னும் வாலிபர் முகுந்த்பூர் பகுதியை சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த பெண்ணை தனது நண்பர்களுடன் சேர்ந்து கிண்டல் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார் அபிஷேக்.
 
இதனால் அபிஷேக் மீது அந்த பெண் வெறுப்பில் இருந்தார். இந்நிலையில் அந்த பெண்ணிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள அபிஷே வற்புறுத்தினார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.
 
இதனால் அந்த இளம்பெண்ணை பழிவாங்க வேண்டும் என திட்டம் தீட்டிய அபிஷேக் தனது மாமா மற்றும் நண்பருடன் சேர்ந்து பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனை தடுக்க வந்த பெண்ணின் சகோதரனை தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
கடுமையான தீ காயங்களுடன் சாஃப்தார்ஜுங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி நீர் விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? : கருணாநிதி