Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிசிடிவி கேமராவில் பதிவான பேய் ; வாகனங்கள் மோதியும் எதுவும் ஆகவில்லை (வீடியோ)

சிசிடிவி கேமராவில் பதிவான பேய் ; வாகனங்கள் மோதியும் எதுவும் ஆகவில்லை (வீடியோ)

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (15:38 IST)
பல வாகனங்கள் மோதியும் எதுவும் ஆகாமல் ஒரு பேய் உருவம் சாலையை கடந்து செல்லும் வீடியோ வெளியாகி பீதியை கிளப்பியுள்ளது.


 

 
பொதுவாக கடவுள் நம்பிக்கைப் போலத்தான் ஆவி,பேய் மற்றும் பிசாசு ஆகியவற்றின் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பது. அது அவர் அவர் நம்பிக்கையைப் பொறுத்தது.
 
ஆவி வீடியோக்கள் யூடியூப்பில் கொட்டிக் கிடக்கின்றன. சிலவற்றை பார்க்கும் போதே அது பொய்யாக ஜோடித்தது என்று நமக்கு தெரிந்து விடும். ஆனால், சில வீடியோக்கள் நிஜத்திற்கு அருகில் இருப்பது போல் தெரியும். அதுபோல் டில்லியில் உள்ள சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு ஆவி உருவம் தொடர்பான வீடியோ இணையத்தில் உலா வருகிறது.
 
டில்லியில் உள்ள ஒரு சாலையில், அதிகாலை 2.11 மணி அளவில் ஒரு கருப்பு உறுவம் நடந்து செல்கிறது. அப்போது அந்த சாலை வழியாக செல்லும் ஒரு லாரி, அந்த உருவத்தின் மீது மோதுகிறது. ஆனால், அந்த உருவத்திற்கு எதும் ஆகவில்லை. அதன்பின்னும் அந்த உருவம் தொடர்ந்து நடக்கிறது. அதன்பின் 2 கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை அந்த உருவத்தின் மீது மோதி கடந்து செல்கிறது.
 
ஆனாலும், எதுவும் ஆகாமல் நடந்து செல்லும் அந்த உருவம் சட்டென மறைந்து விடுகிறது. அந்த சிசிடிவி வீடியோவில் தேதி 15.08.2016 என்று காட்டுகிறது. அதை, தற்போது யாரோ இணையத்தில் பதிவு செய்துள்ளார்கள். 
 
அந்த பேய் வீடியோ உங்கள் பார்வைக்கு....
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை தாக்கினால் இந்திய வடகிழக்கு மாநிலங்களை தாக்குவோம்: வங்கதேச முன்னாள் ராணுவ அதிகாரி

இந்தியா கூட்டணி தலைவர்களின் தூக்கம் கெட்டுவிட்டது.. பிரதமர் மோடியின் அதிரடி பேச்சு..!

1000 பள்ளிகளை மூட உத்தரவு.. உணவு பொருட்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான்

பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உண்மைதான்: பெனாசிர் புட்டோ மகன்

போர் விமானங்களை சாலையில் இறக்கி பயிற்சி பெறும் இந்திய ராணுவம்.. நடுக்கத்தில் பாகிஸ்தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments