Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை செல்லும் பெண்களுக்கு காயத்ரி ரகுராம் கேட்ட கேள்வி

Webdunia
திங்கள், 24 டிசம்பர் 2018 (20:53 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்த போதிலும் சபரிமலைக்கு செல்ல முயலும் பெண்களுக்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதால் அவர்கள் திருப்பி அனுப்பப்படும் சூழ்நிலையே உள்ளது.

இந்த நிலையில் நேற்றும் சபரிமலைக்கு சென்ற பெண்கள் இருவர் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான காயத்ரி ரகுராம் கேள்வி ஒன்றை தனது டுவிட்டரில் எழுப்பியுள்ளார்.

ஐயப்பன் மீது நம்பிக்கை இல்லாத பெண்கள், அங்கு என்ன சாதிப்பதற்காக செல்ல முயற்சி செய்கிறீர்கள்? உண்மையில் உங்களுக்கு ஐயப்பன் மீது நம்பிக்கையும் பக்தியும் இருந்தால் 40 வயதுக்கும் மேல் வரும் வரை பொறுமையாக இருங்கள். ஆண்டாண்டு காலமாக கடைபிடித்துவரும் விஷயத்தை பிடிவாதமாக செய்ய முயற்சிக்க வேண்டாம்' என்று கூறியுள்ளார்.

ஐயப்பன் கோவிலுக்கு பக்தியுடன் செல்ல வேண்டும் என்பதே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் சாரம்சமே தவிர, வீம்புக்காக செல்வதை அந்த தீர்ப்பு சொல்லவில்லை என்றும் காயத்ரி ரகுராமுக்கு ஆதரவாக நெட்டிசன்களும் கருத்து கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் முதல் ஏசி புறநகர் மின்சார ரயில்.. சோதனை ஓட்டம் நடத்த திட்டம்..!

மக்களை குடிக்கு அடிமையாகியதுதான் திராவிட மாடல்.. பொங்கல் மது விற்பனை குறித்து அன்புமணி..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக நாம் தமிழர் வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்பு..!

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கட்டுப்பாடு.. காவல்துறை அறிவிப்பு..!

விஜய் இந்தியா கூட்டணிக்கு வரவேண்டும்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments