Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கங்கை நதியில் தூய்மையாக இருக்கும் ஒரே ஒரு இடத்தையாவது காட்ட முடியுமா?: பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி

Webdunia
சனி, 10 அக்டோபர் 2015 (08:32 IST)
கங்கை நதியில் தூய்மையாக இருக்கும் ஒரே ஒரு இடத்தையாவது உங்களால் காட்ட முடியுமா?என்று மத்திய அரசை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேட்டுள்ளது.
 
மத்திய நீர்வளத் துறை, மாசுப்பட்டிருக்கும் கங்கை நதியை தூய்மைப்படுத்த இதுவரை சுமார் 4000 கோடி ரூபாய் செலவு செய்யப்படிருப்பதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், மத்திய அரசின் பதிலைக் கேட்டு கோபமடைந்த பசுமை தீர்ப்பாய தலைவர் ஸ்வதந்தர் குமார்  "கங்கையை தூய்மைப்படுத்த சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறீர்கள், 2500 கீமீ நீளம் கொண்ட கங்கை நதியில் தூய்மையாக இருக்கும் ஒரே ஒரு இடத்தையாவது உங்களால் காட்ட முடியுமா? இவ்வளவு பணம் செலவு செய்தது மோசமாக இருக்கும் கங்கையை மேலும் மோசமாக மாற்றதானா?
 
கங்கையை தூய்மைப்படுத்தும் விஷயத்தில் உண்மையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நாங்கள் இந்த குற்றசாட்டை தீடீரென சுமத்தவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 
உண்மையில் நதியை தூய்மைப்படுத்த எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மாறாக மத்திய அரசும், மாநில அரசுகளும் பொறுப்பை ஒருவர் மீது ஒருவர் சுமத்துகின்றனர்.  கங்கையை தூய்மைபடுத்தவது உங்களின் முதன்மை பொறுப்பாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments