Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலித்துக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற எம்.பி. தருண் விஜய் தாக்கப்பட்டார்

Webdunia
சனி, 21 மே 2016 (08:47 IST)
உத்தரகண்ட் மாநிலம் சக்ரதா பகுதியில் உள்ள கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. தருண் விஜய் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
டேராடூனில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனா கிராமத்தில் சில்குர் தேவதா என்ற கோவில் உள்ளது. அங்கு பல வருடங்களாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. 
 
இதை எதிர்த்த உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி.தருண் விஜய், அந்த கோவிலிக்குள் தாழ்த்தப்பட்டோரை அழைத்துச் சென்று வழிபடும் பிரசார இயக்கத்தை தொடங்கினார். 
 
மேலும், கடந்த வெள்ளிக்கிழமை அவர் தாழ்த்தப்பட்ட வகுப்புகளை சேர்ந்த பலரை அழைத்துக் கொண்டு சில்குர் தேவதா கோவிலுக்குள் சென்று தருண் விஜய் வழிபட்டார்.
 
அப்போது ஒரு கும்பல், தருண் விஜய் மற்றும அவருடன் வந்தவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். தருண் விஜயின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அவரின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
 
உடனடியாக போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments