Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காந்தி ஜெயந்திக்கு விடுமுறை இல்லை என்பது காங்கிரசின் குறும்புத்தனம்: கோவா முதலமைச்சர்

காந்தி ஜெயந்திக்கு விடுமுறை இல்லை என்பது காங்கிரசின் குறும்புத்தனம்: கோவா முதலமைச்சர்
, திங்கள், 16 மார்ச் 2015 (08:25 IST)
காந்தி ஜெயந்திக்கு விடுமுறை இல்லை என்பது தட்டச்சு பிழை அல்லது காங்கிரசின் குறும்புத்தனம் என்று கோவா முதலமைச்சர் பர்சேகர் கூறியுள்ளார்.
 
கோவா மாநிலத்தில் காந்தி பிறந்த தினமான அடோபர் 2 ஆஈம் தேதி நாடு முழுவதும அரசு விடுமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் காந்தி ஜெயந்திக்கு கோவாவில் விடுமுறை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை செய்திகள் வெளியானது.

இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவியது. மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. 
 
காந்தி ஜெயந்திக்கான விடுமுறை, வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களை கவனத்தில் கொண்டு நீக்கப்படுவதாக கோவா அரசு கூறியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
 
மகாத்மா காந்தியை அவமானப்படுத்தும் வகையிலும், அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் கோவா அரசு இது போன்ற முடிவுகளை எடுத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான குரு தாஸ் காமத் குற்றம் சாற்றியுள்ளார்.
 
மேலும், இது போன்ற நடவடிக்கைகளால் பாஜக வின் மறைமுக திட்டம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது. இது ஆரம்பமாக இருக்கும் என்றே தோன்றுகிறது. வரும் காலங்களில் கோட்சேயின் பிறந்த நாளில் விடுமுறை இருக்காது என்று நம்புவதாகவும் காமத் கூறியிருந்தார்.
 
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பதிலளித்த கோவா முதமைச்சர் பர்சேகர், 'காந்தி ஜெயந்தியன்று விடுமுறை விடப்படுவதை கைவிடும் எண்ணம்  அரசுக்கு இல்லை என்றும், ஒரு வேளை அப்படி ஏதாவது அறிவிப்பு வெளியாகி இருந்தால், அது தட்டச்சுப் பிழையாக இருக்கும் அல்லது காங்கிரஸ் கட்சியின் குறும்புத்தனமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil