Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி: 7 லட்சம் பேர் முன்பதிவு!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (07:27 IST)
நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 7 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சிறுவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்
 
அதன்படி பிரதமர் மோடி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவித்திருந்தார். மேலும் கோவின் இணையதளத்தில் இதற்கான முன்பதிவுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நிலையில் இதுவரை 7 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக முன் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழகத்தில் தடுப்பு ஊசி செலுத்துவதற்கு சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments