Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிக் கணக்குகள் முடக்கம் ஜனநாயக விரோதம்! - காங்கிரஸ்

Sinoj
வியாழன், 21 மார்ச் 2024 (15:39 IST)
காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று  தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார்.
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிக்கார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தனர்.
 
அப்போது சோனியா காந்தி கூறியதாவது: ''மக்களிடம் இருந்து காங்கிரஸ் பெற்ற நிதியை முடக்கியுள்ளது ஜன நாயக விரோத செயலாகும். இந்தச் சவாலான  சூழ் நிலையில், தேர்தல் பிரசாரம் திறம்பட மேற்கொள்ள எங்களால் முடிந்தவற்றை செய்து வருகிறோம்.  காங்கிரஸ் வங்கி கணக்குகளை முடக்கி தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ராகுல்காந்தி, ''இது காங்கிரஸ்கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் அல்ல. இது இந்திய ஜனநாயகத்தின் முடக்கம். இது பிரதமர் மோடி மற்றும்  உள்துறை அமைச்சர் ஆகியோரால்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது''  என்று குற்றம்சாட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1.5% உயரும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

கள்ளச்சாராய சாவு வழக்கில் திமுக அரசின் முயற்சிக்கு சம்மட்டி அடி: டாக்டர் ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அதிபர் ஆட்சி முறையை கொண்டு வந்துவிடும்: கனிமொழி எம்.பி.

டிடிவி தினகரன் நிகழ்ச்சியில் ‘கடவுளே அஜித்தே’ கோஷம்.. அதற்கு அவர் கொடுத்த கமெண்ட்..!

தாறுமாறாக ஓடிய காரால் பயங்கர விபத்து.. சென்னை வேளச்சேரி அருகே பதற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments