Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’இன்று முதல்’ - ரயில் நிலையத்தில் இலவச வைஃபை!

’இன்று முதல்’ - ரயில் நிலையத்தில் இலவச வைஃபை!
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (18:38 IST)
டெல்லி மெட்ரோ ரயிலில் இன்று முதல் பயணிகள் இலவச வைஃபை வசதி துவக்கப்பட்டுள்ளது.

 
 
இந்த சேவையை மெட்ரோ ரயில் நிர்வாக மேலாண்மை தலைவர் டாக்டர். மாங்கு சிங், சிவாஜி மெட்ரோ நிலைய அரங்கத்தில் இன்று துவக்கி வைத்தார். 
 
இதன் மூலம் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் 'Oui DMRC' என்ற இந்த இலவச வைஃபை வசதியை இன்று முதல் மக்கள் பயன்படுத்தி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தினுள் செல்லும் மக்கள் இலவச வைஃபை வசதி மூலம் இ-மெயில், பேஸ்புக், கூகுள், வீடியோ கலந்துரையாடல் ஆகியவை பயன்படுத்தி கொள்ளலாம். 
 
டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தற்போது அங்கு முக்கிய நான்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் வைஃபை வசதி வழங்கியுள்ளது. இதனிடையே டெல்லியின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இலவச வைஃபை வசதியை விரைவில் ஏற்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிர முயற்சி செய்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஜெயலலிதா விரைவில் பொறுப்புகளை ஏற்பார்’ - பண்ருட்டி ராமச்சந்திரன் உறுதி