தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகள் கைது.! சிறையில் வைத்து கைது செய்த சிபிஐ..!!

Senthil Velan
வியாழன், 11 ஏப்ரல் 2024 (16:04 IST)
மதுபான கொள்கை முறைகேடு விசாரிக்க வழக்கு குறித்து விசாரிக்க தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை சிபிஐ காவலில் எடுத்துள்ளது. 
 
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத் துறை மார்ச் 15-ம் தேதி கைது செய்தது. அவரை முதலில் 7 நாட்களும் பிறகு மேலும் 3 நாட்களும் அமலாக்கத் துறை காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அமலாக்கத் துறை காவல் முடிந்து மார்ச் 26-ம் தேதி கவிதா டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கவிதா டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். கவிதாவின் நீதிமன்ற காவல்  ஏப்ரல் 23-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: பாஜகவுடன் சேர்ந்து சமூக நீதிக்கு துரோகம் இழுத்தவர் ராமதாஸ்..! செல்வப்பெருந்தகை காட்டம்..!!
 
இதனிடையே கவிதாவிடம் விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. இதையடுத்து, கடந்த 5-ம் தேதி நீதிமன்றம் சிபிஐக்கு அனுமதி வழங்கிய நிலையில், கவிதாவிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள்,  இன்று சிறையில் வைத்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறக்கையில் திடீர் தீ.. நொடிப்பொழுதில் வெடித்து சிதறிய விமானம்! - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

சரக்கு ரயில் - பயணிகள் ரயில் மோதி பயங்கர விபத்து.. 11 பேர் பலி.. 20 பயணிகள் நிலை என்ன?

உதவி கேட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய காவல்துறை! - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

பெண்கள் குளிக்கும் அறையில் ரகசிய கேமிரா.. ஓசூர் டாடா நிறுவனத்தில் பெரும் பதட்டம்..!

என் அப்பாவை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் திமுகவின் கைக்கூலிகள்: அன்புமணி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments