Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் மேலும் 5 பேருக்கு ஜிகா வைரஸ்: சுகாதாரத்துறை அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 18 ஜூலை 2021 (07:59 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஒருபக்கம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கேரளாவில் ஏற்கனவே 30 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது மேலும் ஐந்து பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கேரளாவில் ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கேரளாவில் இதுவரை ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதும் எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரே ஒரு பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஒரு பெண்ணும் திருவனந்தபுரத்தில் சுகாதார ஊழியராக பணிபுரிந்து வந்தவர் என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
தற்போது ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட  35 பேரில் 11 பேர் மட்டும்தான் சிகிச்சைகள் இருப்பதாகவும் மீதி 24 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெல்லை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் வழக்கு.. சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..!

இன்று ஒரே நாளில் இரண்டு முறை எகிரிய தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்..!

அதிபர் பதவிக்கு தயாராகி வருகிறேன்.. அமெரிக்க துணை அதிபர் டிஜே வான்ஸ் பேட்டி..!

"எதன் அடிப்படையில் SIR?" ஆர்டிஐ கேள்விக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments