Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும்.! திரிணாமூல் அமைச்சர் சர்ச்சை பேச்சு..!!

Senthil Velan
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (14:06 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நோக்கி கைநீட்டி பேசுபவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று திரிணாமூல் அமைச்சர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் படுகொலை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேற்கு வங்க அமைச்சர் உதயன் குஹா, கொல்கத்தா மருத்துவர் சம்பவத்தில் முதல்வர் மம்தாவை நோக்கி கைநீட்டி பேசுபவர்களும், சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்துப் பேசுபவர்களும் அடையாளம் காணப்பட்டு அவர்களின் விரல்கள் உடைக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.  
 
இல்லையெனில் இது போன்ற நபர்கள் மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றிடுவிடுவார்கள் என்று அவர் தெரிவித்தார். மருத்துவமனை தாக்கப்பட்ட சம்பவம் நடந்தபிறகு கூட, போலீஸார் யார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும் வங்கதேசத்தில் நடந்தது போன்ற சூழலை அரசு இங்கே ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அமைச்சர் கூறினார்.

ALSO READ: நமக்கு சிந்திக்கும் திறன் உள்ளதா? அரசியல் அறிவு உள்ளதா? சீமான் கேள்வி..!!
 
மாநில மக்களின் உதவியுடன் அந்த முயற்சியை நாங்கள் முறியடிப்போம் என்று அமைச்சர் உதயன் குஹா தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

அடுத்த கட்டுரையில்