Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இறந்த மனைவியை நடந்தே தூக்கிச் சென்றவர் குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி

இறந்த மனைவியை நடந்தே தூக்கிச் சென்றவர் குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி
, திங்கள், 5 செப்டம்பர் 2016 (12:18 IST)
ஒடிசா மாநிலத்தில் இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து 10 கி.மீ. நடந்து சென்றவரின் குடும்பத்திற்கு தொண்டு நிறுவனம் ஒன்று வீடுகட்டி கொடுத்துள்ளது.
 

 
ஒடிசா மாநிலம், கலஹந்தி மாவட்டம் மெல்கார் கிராமத்தைச் சேர்ந்த தனா மஜ்கி மருத்துவமனையில் இறந்த தனது மனைவியை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், வாடகை வாகனத்தை ஏற்பாடு செய்யவும் வசதியில்லாததால் இறந்த தனது மனைவியின் உடலை தோளில் பத்து கிலோ மீட்டர் தூரம் சாலையில் சுமந்து சென்றார்.
 
இந்த சம்பவம் நாடும் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனா மஜ்கியின் அவலநிலை தொடர்பான தகவல் வெளியான பின்னர், கலஹந்தி மாவட்ட நிர்வாகம் இதுவரை, ஒரு மூட்டை அரிசியும், ரூ.30 ஆயிரமும் நிதியுதவி வழங்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாயமான மதன் தாயார் கண்ணீர் மல்க கூறிய குற்றச்சாட்டு!