Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்குள் வளரும் கரு.. மருத்துவர்கள் ஆச்சரியம்..!

Mahendran
புதன், 29 ஜனவரி 2025 (14:13 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்குள் இன்னொரு கரு வளர்ந்து வருவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா என்ற மாவட்டத்தில் 35 வயது கர்ப்பிணி ஒருவர் சோதனைக்காக வந்திருந்தார். அப்போது  அவரை சோனாகிராபி மூலம் சோதனை செய்து பார்த்தபோது அவரது வயிற்றுக்குள் உண்டாகிய குழந்தையின் உடலுக்குள் இன்னொரு கரு உருவாகி இருப்பதாகவும் அது முழு வளர்ச்சியடையாத நிலையில் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
 
 இதுபோன்ற அரிய நிகழ்வு ஐந்து லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே நிகழும் என்றும் இதுவரை உலக அளவில் 200 பேருக்கு மட்டுமே இந்த நிலை உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் குழந்தை பின்னர் தான் குழந்தையின் வயிற்றில் இருக்கும் கருவை என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றும் எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் தாய்க்கு முதலில் பிரசவம் பார்த்தவுடன் இது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் மருத்துவ வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திரும்ப பெறப்படும் புதிய வருமானவரி மசோதா! மீண்டும் புதிய மசோதா! - மத்திய அரசு அதிர்ச்சி முடிவு!

10 சதுர அடி வீட்டில் 80 வாக்காளர்கள்.. ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு..!

கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுத்து திமுக அடிமையாக வைத்துள்ளது: எடப்பாடி பழனிசாமி

மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் இன்று ஒரு நாடகம் அரங்கேற்றம்: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments