மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை.. 150 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு..!

Siva
வெள்ளி, 26 ஜனவரி 2024 (07:34 IST)
கேரளாவில் 17 வயது  பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 150 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது  

கேரளாவில் உள்ள மலப்புரம் என்ற பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி, மனைவி மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திடீர் என கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து மனைவி தனது 17 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் தாயார் கூலி வேலைக்கு சென்று இருந்த போது மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த தந்தை அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இது குறித்து மலப்புரம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிறுமியின் தந்தையை அதிரடியாக கைது செய்த போலீசார்  சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளிக்கு  150 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் நான்கு லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்