Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகள் தன் ஜாடையில் இல்லை…மனைவி மேல் சந்தேகம் – குழந்தைகளைக் கொன்ற கொடூர தந்தை !

Webdunia
ஞாயிறு, 16 ஜூன் 2019 (11:07 IST)
தனது 4 குழந்தைகளும் தன் ஜாடையில் இல்லை என சந்தேகப்பட்டு கொடூரமான செயல் ஒன்றை செய்துள்ளார் உத்தர பிரதேசத்தை சேர்ந்த தகப்பன் ஒருவர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிர்மல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஹ்டாஷ். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள். ரோஹ்டாஷுக்குத் தன் மனைவி வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளதாகவும் அந்த குழந்தைகள் அனைத்தும் கள்ளத்தொடர்பில்தான் பிறந்ததாகவும் சந்தேகப்பட்டு வந்துள்ளார். மேலும் குழந்தைகள் அனைத்தும் தன் ஜாடையில் இல்லை எனவும் புலம்பியுள்ளார்.

இந்த சந்தேகத்தீ அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக எரிக்க கடந்த ஜூன் 9 ஆம் தேதி தனது 4 குழந்தைகளையும் கத்தரிக்கோலால் குத்தியுள்ளார். இதில் அவரது மகன்கள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். மனைவியும் மகள்கள் இரண்டு பேரும் காயங்களுடன் தப்பியுள்ளார். இதையடுத்து ரோஹ்டாஷ் மேல் போலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments