Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கிரிமினல்கள்: பாஜக அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்து

தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கிரிமினல்கள்: பாஜக அமைச்சர்  சர்ச்சைக்குரிய கருத்து
, புதன், 29 ஏப்ரல் 2015 (12:57 IST)
தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள் மற்றும் கிரிமினல்கள் என்றும் அவர்களை பற்றி அரசாங்கம் ஏன் கவலைப்பட வேண்டும் என்றும் ஹரியானா அமைச்சர் ஓ.பி.தங்கர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
வறட்சியாலும், கடன் தொல்லையாலும் நாடு முழுவதும், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இதனால், பல விவசாயிகள் தற்கொலை செய்து கொளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
 
விளைச்சல் பாதிக்கப்பட்டதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததாலும் வறுமையாலும் அல்லலுற்று தற்கொலை செய்து கொள்ளும் முடிவை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
 
விவசாயிகள் இத்தகைய தற்கொலை முடிவை கைவிட வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் ஹரியானா மாநில அமைச்சர் ஓ.பி.தங்கரின் பேச்சு மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
 
ஓ.பி.தங்கர் கூறியிருப்பதாவது:-
 
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் தங்கள் பொறுப்பை மறந்து ஓடுகின்றனர். அவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களை கோழைகள் மற்றும் கிரிமினல்கள் என்று தான் கூறவேண்டும். எனவே அவர்களை பற்றி அரசாங்கம் ஏன் கவலைப்படவேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
 
ஏழைகளுக்கு நன்மை செய்வதாகக் கூறி பாஜக ஆட்சியை பிடித்தது. ஆனால் வறுமையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளை கிரிமினல்கள் என்று ஒரு அமைச்சர் கூறியிருக்கும் பேச்சு மக்கள் மீது சிறிதும் அக்கறையற்ற, பொருப்பில்லாத பேச்சு என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil