விவசாயிகளால் நஷ்டத்தில் ரயில்வே... புலம்பும் மத்திய அரசு !!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (09:31 IST)
ரயில்வே துறைக்கு ரூ.2400 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 
 
மத்திய அரசு சமீபத்தில் அமல் செய்த புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த 31 நாட்களுக்கும் மேலாக டெல்லி பஞ்சாப் ஹரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்நிலையில் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு, விவசாயிகள் பிரதிநிதிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்பதில் விவசாயிகள் தெளிவாக இருப்பதால் போராட்டம் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது. 
 
31 நாட்களாக விவசாயிகள் ரயில்களை மறித்து போராடிவருவதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டும், மாற்று வழியில் திருப்பி விடப்பட்டும் வருகிறது. இதனால் ரயில்வே துறைக்கு ரூ.2400 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய எடுத்த முயற்சி முறியடிப்பு. FBI தகவல்..!

எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட வயது வரம்பு குறைக்கப்படுகிறதா? கல்லூரி மாணவர்களும் இனி போட்டியிடலாமா?

மீண்டும் ஹிஜாப் சர்ச்சை: கொச்சி பள்ளியில் இருந்து மாணவிகள் விலகல்..!

சிவகாசியில் ரூ.7000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை.. கடந்த ஆண்டை விட ரூ.1000 கோடி அதிகம்..!

சென்னையில் தீபாவளி தினத்தில் வெளுத்து வாங்கும் மழை.. இன்று மழை பெய்யும் மாவட்டங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments