Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"விவசாயி தற்கொலை - மத்திய அரசுக்கு ஓர் எச்சரிக்கை": மு.க.ஸ்டாலின்

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2015 (16:07 IST)
நிலம் கையகப்படுத்துதல் மசோதாவைக் கண்டித்து டெல்லியில் நடைபெற்ற பேரணியின்போது, விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி; ஆகவே மத்திய அரசு விவசாயிகள் விரோத நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை கைவிட வேண்டும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

 
இது தொடர்பாக அவரது முகநூல் பதிவில், "நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து நடைபெற்ற ஆம் ஆத்மி பேரணியில் பங்கேற்று விவசாயி தற்கொலை செய்துகொண்ட செய்தி கேட்டு மனம் உடைந்து போனேன். அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நிலம் என்பது பொருளாதாரம் சார்ந்த சொத்து மட்டுமல்ல. விவசாயக் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்குமான ஆதாரமாகும். பணத்தைக் கொடுத்து ஈடுகட்ட முடியாத அளவிற்கு நிலம் என்பது அந்த நில உரிமையாளர்களின் உணர்வோடு தொடர்புள்ளது.
 
இந்த தற்கொலை மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி. ஆகவே உரிய முறையில் செயல்பட்டு விவசாயிகள் விரோத நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மக்கள் விரோத மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments