Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.200க்கு லீஸ் எடுத்த நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைரம்: விவசாயிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

Webdunia
திங்கள், 7 டிசம்பர் 2020 (13:22 IST)
ரூ.200க்கு லீஸ் எடுத்த நிலத்தில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வைரம்
200 ரூபாய்க்கு லீசுக்கு எடுத்த விவசாயி ஒருவருக்கு 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரம் கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லகான் என்ற விவசாயி நிலம் ஒன்றை ரூபாய் 200க்கு லீஸ் எடுத்தார். அந்த நிலத்தை அவர் விவசாயத்திற்காக தோண்டியபோது வித்தியாசமான ஒரு கல் கிடைத்தது. அந்த கல்லை எடுத்து அவர் அருகில் உள்ள அதிகாரியிடம் காண்பித்த போது அந்த கல் 14.98 காரட் என்று தெரியவந்தது 
 
இதனை அடுத்து அந்த வைரம் சமீபத்தில் ஏலத்திற்கு விடப்பட்டபோது ரூபாய் 60 லட்சம் கிடைத்தது. அந்த பணத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மோட்டார் சைக்கிள் வாங்கிய விவசாயி லகான், தனது நான்கு குழந்தைகளின் கல்விச் செலவுக்காக மீதிப்பணத்தை டெபாசிட் செய்துள்ளார் 
 
ஏற்கனவே அதே பகுதியில் மேலும் நான்கு பேருக்கு விவசாய நிலத்தை தோண்டிய போது வைரம் கிடைத்தது என்பதும் அவை அனைத்தையும் சேர்த்து மொத்த மதிப்பு ரூபாய் ஒன்றரை கோடி என்றும் தெரியவந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments