Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகைகளை கடத்தி விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்

பிரபல நடிகைகளை கடத்தி விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்

பிரபல நடிகைகளை கடத்தி விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்
, வெள்ளி, 10 ஜூன் 2016 (09:46 IST)
பாலியல் தொழிலுக்காக கத்தப்பட்ட பிரபல டிவி நடிகைகளை போலீசார் மீட்டனர்.
 

 
மஹாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில், ஒரு கும்பல் இளம் பெண்கள் மற்றும் பிரபல டிவி நடிகைகளை கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக, போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து, அவர்களை மீட்க, மும்பை புறநகர் பகுதியில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதில், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட இளம் பெண்கள், பிரபல டிவி நடிகைகள் இருவரை கையும் களவுமாக பிடித்து மீட்டனர். பின்பு, அவர்கள் பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
 
பிரபல டிவி நடிகைகளை கடத்திய முக்கிய நபர் போலீஸ் வலையில் இருந்து தப்பிவிட்டார். அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
 
போலீஸ் பிடியில் சிக்கிய இந்த இரு பிரபல டிவி நடிகைகள் பெயரை வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரூர் அருகே பாம்பு வேட்டை