குழந்தைக்கு கூட பால் இல்லை ; கேரளாவில் தவிக்கும் குடும்பம் : அதிர்ச்சி வீடியோ

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (12:49 IST)
கேரளாவில் பெய்து வரும் கனமழையில் மின்சாரமின்றி வீட்டில் தவிக்கும் ஒரு குடும்பத்தினர் வெளியிட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலரது வீடுகளில் வெள்ளம் புகுந்ததால், அவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ராணுவத்தினரும், மீட்பு பணியினரும் பள்ளமான இடத்தில் வசிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மழைக்கு இதுவரை 164 பேர் பரிதாபமாக பலியாகிவிட்டனர்.
 
இந்நிலையில்,  வெள்ளம் சூழ்ந்த வீட்டில், மின்சாரமில்லாமல் தவிக்கும் ஒரு குடும்பத்தினர் செல்போன் வெளிச்சத்தில் ஒரு வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில், மின்சாரமின்றி தவிக்கிறோம். வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது. குடிக்க தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் தவிக்கிறோம். குழந்தைக்கு கொடுக்கக் கூட பால் இல்லை. யாராவது எங்களுக்கு உதவுங்கள் என அவர்கள் கண்ணீர் வடித்தபடி கோரிக்கை வைத்துள்ளனர்.
 
பார்ப்பவர்கள் நெஞ்சை கரைய வைக்கும் அந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

தமிழத்தை நோக்கி நகரும் டிக்வா புயல்.. சென்னைக்கு கனமழை ஆபத்தா?

சிறைச்சாலையா? மதுவிருந்து கூடாரமா? சிறைக்குள் நடந்த மதுவிருந்து வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!

முஸ்லீம் எம்பி இருந்தால் தானே அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியும்: பாஜக எம்பி சர்ச்சை கருத்து..!

ஆதார் இருந்தால் ஒருவரை வாக்காளராக சேர்க்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments