கழிவறையை சமையலறையாக மாற்றிய குடும்பத்தினர்..

Arun Prasath
சனி, 18 ஜனவரி 2020 (18:17 IST)
உத்தர பிரதேசத்தில் பொதுக் கழிவறையை ஒரு குடும்பத்தினர் சமையல் அறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள அகன்பூர் என்ற கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்திற்காக கட்டப்பட்ட்ட பொதுக் கழிவறையை ராம் பிரகாஷ் என்பவரின் குடும்பத்தினர் சமையல் அறையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

இது குறித்து ராம் பிரகாஷ், ”எங்களுக்கு முறையான வீடு ஒதுக்கப்படவில்லை. ஆதலால் ஒரு வருடமாக பொதுக் கழிப்பறையை சமயலறையாக பயன்படுத்தி வருகிறோம்” என கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து பாரபங்கி மாவட்ட நீதிபதி டாக்டர் ஆதர்ஷ் சிங், “வீட்டு வசதி வேண்டி எந்த தகவலும் வரவில்லை, பிரகாஷ் விண்ணப்பித்தால் அவருக்கு தங்கும் இடவசதி வழங்கப்படும். ஆனால் அவருக்கு எதிராக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments