Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனநாயகத்தில் டீக்கடைக்காரர் கூட நாட்டின் பிரதமர் ஆகலாம் - நரேந்திர மோடி

Webdunia
புதன், 17 டிசம்பர் 2014 (17:52 IST)
ஜனநாயகத்தில் டீக்கடைக்காரர் கூட நாட்டின் பிரதமர் ஆகலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்றுவரும் சட்டமன்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காஷ்மீர் மாநிலத்தில் தந்தை - மகன் ஆட்சிகள்தான் மாறி மாறி நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை மக்களுக்கு ஆட்சி நிர்வாகத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
 
ஜனநாயகத்தை அரித்து தின்னும் கரையான்களாக வாரிசு அரசியல் இருக்கிறது. வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் வேர்களையே அரித்து விடும். இங்கே வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
 
பாஜகவில் ஜனநாயகம் தழைத்தோங்கி நிற்கிறது.ஜனநாயகத்தில் டீக்கடைக்காரர் கூட நாட்டின் பிரதமர் ஆகலாம்” என்று கூறினார்.
 
மேலும், காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது. காஷ்மீர் மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என்றும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடி கூறினார்.

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

Show comments